|
தமிழச்சி என்ற புனைபெயரில் எழுதும் எனது பெயர் யுமா.
தமிழ்நாட்டில் உள்ள பாண்டிச்சேரி பூர்வீகம். அப்பா பிரான்ஸ் இராணுவத்தில் பணியாற்றியவர். ஒரு நூற்றாண்டு காலமாக மூன்றாம் தலைமுறையினரின் பயணமாக பிரான்ஸ் நாட்டில் இருந்தாலும் எனது எழுத்தும், பயணமும், கொள்கையும், தமிழ்நாட்டை நோக்கிய நகர்வும், பெரியாரியல் வாசிப்பின் ஊடாக உருவாகியது.
'ஏற்றுமதி இறக்குமதி' கம்பெணி மற்றும் 'க்ரைணெட்' இறக்குமதி கம்பெணியும் சொந்தமாக நிர்வகித்துக் கொண்டிருக்கும் நான் எழுத்து துறையில் ஈடுபடுவது எனது ஆர்வத்திற்காக. பெரியாரியல் பரப்புரையும், இணையத்தில் பெரியாரியலை ஆவணப்படுத்தும் முயற்சியும் எனது இலட்சியத்திற்காக தொடருகின்றது...
பிரான்சில், UNION REGIONALE DES CIDFFபெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளராகவும், பெரியார் விழிப்புணர்வு இயக்கம் அய்ரோப்பாவின் உருவாக்கமும் சமூக பங்களிப்பிற்கான அடையாளங்கள்.
மற்றவை எனது எழுத்துக்களை வாசிக்கும் உங்கள் கணிப்பில்...
|