Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


JAN
22
2010

தேவையா தறுதலைச் சாமிகளின் புராணங்கள்?

"கடவுள்களின் திருவிளையாடல்கள்" என்னும் தலைப்பில் 23.06.1945-இல் பெரியார் ´குடிஅரசு´வில் எழுதிய கட்டுரையில் இந்து கடவுள்களின் அவதாரத்தின் மூலம் செய்த சில்மிஷங்களை அதாவது, பார்ப்பனர்கள் கூறிய புராணக் கதைகளின் யோக்கியதையை கேள்விக்குட்படுத்துகிறார்.

நாம் சிந்திக்க வேண்டும். எவ்வளவு கேவலமான அசிங்கம் பிடித்த ஆபாச கதைகளை நமக்கு புராணக் கதைகளாக சொல்லி அதை புனிதப்படுத்த முயலுகிறார்கள் பார்ப்பனர்கள் என்பதும், நம்மை முட்டாள்களாக வைத்திருக்க அவர்களின் புனைவு கதைகளை நாம் ஏற்க வேண்டுமா? என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய சங்கதி.

எண்ணித் தொலையா இப்பாழும் ஆண்சாமி, பெண்சாமிகளின் யோக்கியதையை நாம் போற்ற வேண்டுமா? இந்த புராணங்கள் மக்களுக்கு என்ன ஒழுக்கத்தை படிப்பிக்கிறது?

இதையெல்லாம் ஒழித்தால் தான் நாம் உருப்படுவோம் என்கிறார் பெரியார். எத்தனையெத்தனை வகைப் பெயர்களை வகைப்படுத்தி பொறும்புகிறார்
பெரியார். பாருங்கள்.....

பெண்டாட்டிசாமி, தறுதலைச்சாமி,
கல்லுச்சாமி, மண்ணுச்சாமி,
கட்டைச்சாமி, செம்புச்சாமி,
பொம்மைச்சாமி, வீட்டுச்சாமி,
காட்டுச்சாமி, ஆற்றுச்சாமி,
மயிலேறுஞ்சாமி, குயிலேறுஞ்சாமி,
மாடேறுஞ்சாமி, ஆடேறுஞ்சாமி,
எலியேறுஞ்சாமி, புலியேறுஞ்சாமி,
கழுகேறுஞ்சாமி, குரங்கேறுஞ்சாமி,
ஆனைமுகச்சாமி, ஆமைமுகச்சாமி,
பன்றிமுகச்சாமி, பாம்புமுகச்சாமி,
எலிமுகச்சாமி, புலிமுகச்சாமி,
சிங்கமுகச்சாமி, சிறுத்தைமுகச்சாமி,
கொல்லைப் பிடாரி, எல்லைப் பிடாரி,
குழமாயி, குழந்தையாயி,
அங்கம்மன், அங்காளம்மன்,
மூக்கம்மன், மூத்தாளம்மன்,
பொம்மியம்மன், வெள்ளையம்மன்,
ஜக்கம்மன், தீப்பம்மன், தீப்பாச்சியம்மன்,
சாமூண்டியம்மன், சரவேரியம்மன்,
வள்ளியம்மன், தெய்வானை,
காமாஷி, விசாரலாட்சி,
பேச்சியாயி, லட்சுமி, ஆண்டாள்
முதலிய அம்மாமார்களும்....

சிவன், நாராயணன், பிரம்மன்,
முருகன், அய்யனார், ஆஞ்சிநேயர்,
காட்டான், மாடன், காட்டேரி,
கருப்பண்ணன், முனீஸ்வரன், இருளன்,
பேயாண்டி, பெரியண்ணன், சின்னண்ணன்,
காத்தவராயன், மதுரைவீரன்,
வீரியன், நொண்டி, தூரி, தூண்டி,
நல்லண்ணன், தொட்டியத்து சின்னான்,
மன்னாரு, பனைமரத்தான், நாட்ராயன்
முதலிய அய்யாமார்களும்...

நமது நாட்டைவிட்டு என்று தொலைவார்களோ அன்றே நமது நாடு விடுதலையடையும் நிச்சயம். நிச்சயம்!

தமிழச்சி
22.01.2010


தொடர்புடைய இணைப்பு:
* கடவுள்களின் திருவிளையாடல்கள்!
http://bit.ly/8bdXfx
* நாத்திகம் என்றால் என்ன?
http://bit.ly/90kqwu
 

 
 

 

 88 

 

 89 

 

 90 

 

 91 

 

 92 

 

 93 

 

 94