Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


JAN
26
2010

வாசகர் கடிதங்கள்..

Name : adhiran
e-mail : sirumiadhira@gmail.com

message : லீனாவின் கவிதை தொடர்பான சர்ச்சைகளின் பதிவுகளில் உங்கள் பதிவு தான் எனக்கு விசயத்தை ஓரளவு புரிய வைக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவர் தெர்தெடுக்கும் வாழ்வுமுறைக்கும் அவரது புனைவுகளுக்கும் முழுமையான தொடர்பு இருக்குமா? சொகுசான வாழ்விற்காக நேர்மையட்ற வாழ்வுமுறையை தேர்வு செய்து வாழ்பவரிடமிருந்து வரும் படைப்பு பிரதியை நாம் அவரது சொந்த வாழ்வின் முன்னிறுத்தியே அனுகவேண்டுமா? உளவியல் ரீதியாக அப்படைப்பு பல்வேறு தளங்களுக்கு இட்டு செல்லாதா? லீனா என்கிற ஒட்றை சொல் மூலம் இக் கேள்விகளை பார்க்காமல் பொதுவான புரிதலாய் இக்கேள்விகளிகு தனிப்பட்ட ஒரு விளக்கம் தரவியலுமா?

சமூக அரசியலின் அடிப்படையில் இக்கேள்விகள் கேட்கப்படவில்லை என்று அறிவீற்கள் என நம்புகிறேன். நன்றி.

நட்புடன்,
ஆதிரன்.
(ahiran.blospot.com)

அன்புடைய ஆதிரன்

"சுயநலம் இல்லாத மனிதன் இல்லை" என்பதை நாம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். மனிதனின் அடிப்படைத் தத்துவமான இதை விளங்கிக் கொள்வதிலும், நம் சுயநலத்தை எப்படி கையாளுகிறோம் என்பதை பொறுத்தும் நம் நிலைப்பாடுகள் கவனிக்கப்பட வேண்டும். எந்த செயல்பாடுகளும் தானாக நிகழ்வதில்லை. சிந்தனை, திட்டமிடல், அதனூடான செயல்பாடுகள் அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் இப்படி தொடர் சங்கிலி போல் விளைவுகளை எதிர்நோக்க வைப்பது ஒரு தனிமனித சிந்தனையில் உருப்பெறும் கருத்தாக்கமாகும். அதன் தாக்கங்கள் அடுத்த மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் போது அதற்கு எதிர்மறையான செயல்களும் உருவாகிறது.

தத்துவஞானி ஜே.கே.கிருஷ்ணமூர்த்தியிடம் ஹிம்சை (Violence), பேராசை (Greed), புகழ்பெற வேண்டும் என்ற ஆசை (Ambition), போட்டி மனப்பான்மை (Competition), பண்பற்ற மிருகத்தனம் (Brutality), தற்பெருமை (Vanity), பொறாமை (Jealousy), தந்திரம், வஞ்சகம், சூது (Cunning) போன்ற குணங்களைக் கொண்டவர்கள் நிறைந்த உலகில் ஒருவன் எப்படி வாழ்ந்து வரவேண்டும் என்றொரு கேள்வி முன்வைக்கப்பட்ட போது,

"இன்றைய மனிதர்களிடம் சுயநலப்போக்கு மிகுதி இருப்பதற்கான காரணங்களும், அவை மற்ற மனிதர்களை எப்படி அலைக் கழிக்கிறது என்றும் குறிப்பிட்டு விட்டு, கருத்துக்கள் (Ideas), கொள்கைகள் (Ideologies), நம்பிக்கைகள் (Beliefs), கடவுள்கள், மதங்கள், கட்சிகள், சொத்துக்கள், மனித இனம், உலகம் போன்றவற்றுடன் மனிதர்கள் எப்படிப்பட்ட உறவை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் நம்மைச் சுற்றியும், உலகைச் சுற்றியும் சூழ்நிலைகள் அமைகின்றது என்கிறார்.

இவற்றை நம் உணர்வுகளோடு பொறுத்தி பார்ப்போம். எத்தனை வீதம் உண்மைகள் இருக்கிறது என்பதை நம்மால் உணரமுடியும்.

நேர்மையற்ற வாழ்வுமுறையை தேர்வு செய்து வாழ்பவரிடமிருந்து வரும் படைப்பு பிரதியை அவருடைய குணநலங்களோடும் வாழ்வியல் முறையோடும் பொறுத்திப் பார்க்க வேண்டுமா? என்கிறீர்கள்.

பொறுத்திப் பார்க்க தேவையில்லைதான். ஆனால் என்ன இலக்கியம் வெளிப்படுகிறது என்பது முக்கியம் அல்லவா?

தத்துவஞானியான ´ஜேம்ஸ் ஆலன்´ மனிதர்களின் குணநலன்களை அட்டவணைப்படுத்தியதும் நினைவுக்கு வருகிறது.

படித்துப் பாருங்கள்: http://bit.ly/4qz4RF

~*~

Name : baskar
e-mail : tamizhikani@yahoo.com

message : உங்களின் \\\\\\\´கேலியான வார்த்தையா மனிதநேயம்\\\\\\\´

எளிய மொழியில் எளியவர்க்கும் புரியும் வண்ணம் எழுதி இருந்தீர்கள். ஆனால் உங்களின் மொழி எளியவரை சென்றடைகிறதா? நான் உங்களின் வலைதளதுக்கு புதியவன் என்பதால் இந்த சந்தேகம். அதோடு காரண காரியங்களை athey எளிய  சொல்லி இருக்கலாம் என்பது என் விருப்பம்.

அன்புடைய பாஸ்கர்

என் மொழி எளியவர்களை சென்றடைகிறதா என்கிறீர்கள். நல்ல கேள்வி தான். கொஞ்சம் ஆழ்ந்து விவாதிக்க வேண்டும் என நினைக்கிறேன். முதலில் நான் இலக்கியவாதியாக உருவாக வேண்டும் என்று எண்ணவில்லை. கொள்கைவாதியாக செயல்களை முன்னெடுக்க வேண்டும் என்கின்ற இலட்சியம் மட்டுமே இருக்கிறது. பெரியார் சிந்தனைகள் முழுவதையும் இணையத்தில் தொகுக்க வேண்டும் என்பதை தவிர வேறு எண்ணமும் இல்லை. இதனுடன் சமூக நிகழ்வுகளை விமர்சிக்க தோன்றினால் அவப்போது என் தளத்தில் எழுத தூண்டுகிறது.

சில பத்திரிகைகள் சில இணையதளங்கள் கட்டுரை எழுதி தரும்படி கேட்டும் நான் மறுத்திருக்கின்றேன். என் தளத்தில் எழுவதில் தேவைப்பட்டால் அவர்கள் பிரசுரிக்க அனுமதித்து இருக்கின்றேனே தவிர எனக்குள் பத்திரிகைகளுக்காக எழுத வேண்டும் என்று இதுவரை தோன்றியதில்லை.

இணையத்தின் மூலம் மட்டுமே தொடர்பில் இருப்பதால் நீங்கள் குறிப்பிட்டது போல் எளியவர்களை சென்றடைகின்றதா என்னும் கேள்விக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னொரு புறம் எளியவர்கள் என்பவர்களை யாரை எந்த பொருளில் குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்கவில்லை. இருப்பினும் நன்கு படித்து வெளிநாடுகளில் வேலைக்கு சென்றிருக்கும் நம் இளைஞர்களுக்கு கூட சரியான சிந்தனை இல்லை.

தேடுதலை நோக்கி நகர்பவர்களுக்கு என் எழுத்து உதவ வேண்டும் என்ற சிந்தனை எனக்குண்டு. ஐரோப்பிய அறிஞர்களின் கருத்துக்கள், வரலாறுகள் போன்றவற்றை பதிவு செய்வதும் இந்த எண்ணத்தில் தான். தமிழ்நாட்டுக்கு வந்தால் களத்தில் இருக்கும் போது கிராமப்புறங்களை நோக்கி செல்கிறேன்.

எங்கேயோ இருந்து கொண்டு நம் மக்களுக்காக எழுதுகிறோம். நம் சமூகத்தில் நிறைய மாறுதல்கள் வேண்டும் என்பதற்காக...

சமூகத்தை மாற்ற முடியாவிட்டாலும் நாலு பேரை சிந்திக்க வைத்தால் கூட போதுமே!  

தினமும் என் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது என்னுள் எழுதத் தூண்டும் செய்திகள் சமூக அவலங்கள் குறித்தே....

இப்போதைக்கு மக்களை படிக்க வைத்தால் போதும் என்றிருக்கிறது. நம் மக்களிடம் வாசிப்பு திறன் மிகக் குறைவு!!



 

 86 

 

 87 

 

 88 

 

 89 

 

 90 

 

 91 

 

 92