 |
இலங்கையில் கோணேஸ்வரி என்ற பெண்ணை 17.05.1997- அன்று பத்து போலிசாரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, யோனியில் கிரனைட் வைத்து படுகோரமான முறையில் கொல்லப்பட்டவர். மட்டக்களப்பு 11-ஆம் காலணியைச் சேர்ந்தவர். மூன்று பிள்ளைகளின் தாய்.
இச்சம்பவம் குறித்து சரிநிகர் 123- இல் "கோணேஸ்வரிகள்" என்று தலைப்பிட்டு கலா என்பவர் ஒரு கவிதை எழுதியிருந்தார். இக்கவிதையை குறித்து பல விமர்சனங்களை சரிநிகர் எதிர்கொண்டு சிலவற்றை வெளியிட்டு இருந்தனர். பெண்ணியல் அமைப்பாளர்கள், ஜனநாயகவாதிகள், பெண்கள், பத்திரிகையாளர்கள் இக்கவிதையை குறித்து எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். வழமைப் போல் "யோனி" குறித்து எழுதப்பட்டதால் தான். முதலில் கவிதைகளில் இருக்கும் வரிகளை ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டு அடுத்த கட்ட விமர்சனத்திற்கு செல்வோம்.
கோணேஸ்வரிகள்...! நேற்றைய அவளுடைய சாவு - எனக்கு வேதனையைத் தரவில்லை. மரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள் அதிர்ந்து போதல் எப்படி நிகழும். அன்பான என் தமிழிச்சிகளே, இத்தீவின் சமாதானத்திற்காய் நீங்கள் என்ன செய்தீர்கள்!? ஆகவே: வாருங்கள் உடைகளைக் கழற்றி உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள் என் அம்மாவே உன்னையும் தான். சமாதானத்திற்காய் போரிடும் புத்தரின் வழிவந்தவர்களுக்காய் உங்கள் யோனிகளைத் திறவுங்கள்.பாவம் அவர்களின் வக்கிரங்களை எங்கு கொட்டுதல் இயலும். வீரர்களே! வாருங்கள் உங்கள் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளுங்கள். என் பின்னால் என் பள்ளித் தங்கையும் உள்ளாள். தீர்ந்ததா எல்லாம் அவளோடு நின்றுவிடாதீர்! எங்கள் யோனிகளின் ஊடே நாளைய சந்ததி தளிர்விடக்கூடும். ஆகவே: வெடிவைத்தே சிதறடியுங்கள் ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளி புதையுங்கள் இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி. சிங்கள சகோதரிகளே! உங்கள் யோனிகளுக்கு இப்போது வேலையில்லை.
இது கவிதையாம்! இந்த ஒப்பாரி பாட்டுக்கே இவ்வளவு எதிர்ப்பா? தன்னுடைய உடலை நிர்வாணப்படுத்தி தன் சகோதரியையும், அம்மாவையும் துணைக்கு நிர்வாணமாக்கி, தங்களுடைய யோனிகளை வெறி தீர்க்க அடமானம் வைத்து விட்டு "கூலாக" சொல்கிறார் எங்களுடைய யோனிகளுக்கு வெடி வைத்து தகர்த்து விடுங்கள் என்று.
முதலில் ஒப்பாரி போட்ட கலாவின் யோனிக்குள் முதல் குண்டை வைத்து சிதறடிக்க வேண்டும். ஆணியம் பெண்ணை இயலாமையின் அடையாளமாக சித்தரித்தது போதாதென்று கலா போன்ற சில பெண்கள் செய்யும் கூத்துக்கள் ஒட்டுமொத்த பெண்களையும் இயலாமை தான் நம் பலவீனமோ என்ற எண்ணத்திற்கு இட்டுச் செல்கின்றது. போதாக்குறைக்கு வக்கீரங்களை தீர்த்துக் கொள்ள அலையும் ஆணியத்திற்கு இது போன்ற ஒப்பாரிகள் உற்சாகத்தை பீறிட்டு யோனிக்குள் வீரியத்துடன் அடித்துக் கொண்டுதான் இருக்கும்.
அன்பான என் தமிழிச்சிகளே, இத்தீவின் சமாதானத்திற்காய் நீங்கள் என்ன செய்தீர்கள்!? என் அம்மாவே என் சகோதரியே நீங்களும் வாருங்கள் வக்கீரங்களை தீர்த்துக் கொள்ள வெறிகொண்டு அலையும் வீரர்களின் ஆண்குறியில் குண்டு கட்டி சிதறடிப்போம் என்று ஏன் எழுத முடியவில்லை?
இங்கே பெண்ணின் சுய நிர்ணய உரிமையில் கூட பலவீனம் பொருந்திய சித்தரிப்பாக மற்றொரு பெண் சித்தரிக்கும் போது தன் ஆழ்ந்த புரிதல் உணர்வுகளாக இல்லாமல் ஓப்பாரி புலம்பலாக.... பெண்ணின் இயலாமை தான் மேலும் இருபது பெண்களின் யோனிக்குள் குண்டு வைத்து சிதறடிக்கும் உற்காகத்தை ஆணியத்திற்கு கொடுக்கின்றது. தன் யோனிக்குள் குண்டு வைத்துக் கொள்ளும் இயலாமைக்கு கூட துணைக்கு தன் தாயையும் சகோதரியையும் அழைத்துக் கொள்ளும் பாதுகாப்பு மீண்டும் மீண்டும் பெண் எதற்கும் லாயக்கற்றவள் என்று பெண்ணீயமே அங்கு தீர்மாணித்துவிடுகின்றது.
கோணேஸ்வரியின் சிதறுண்ட யோனியின் சதைத் துண்டுக்கு மற்ற தமிழச்சிகளின் யோனிகளும் சிதறடித்துக் கொள்ள வேண்டுமா? என்ன மானுட வாழ்வியல் நியதி பெண்ணே!
ஏதோ துணிந்து உம்முடைய இயலாமையை வெளிப்படுத்தியதற்கே சமூகத்தில் இந்த எதிர்ப்பு என்றால் கோணேஸ்வரின் சிதறுண்ட யோனி சதைகளைப் பற்றி அங்கே ஏன் விவாதமில்லை?
பத்து ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பாலீயல் வல்லுறவுக்கு உட்படுத்தி, நாசப்படுத்தி யோனிக்குள் குண்டு வைத்து சிதைக்கும் போது, தமிழிச்சிகளே நீங்கள் பத்து பேர் சேர்ந்து ஒரு ஆணின் ஆண்குறிக்கு ஏன் குண்டு கட்ட முடியவில்லை.
உங்கள் மனோபலம் தான் என்ன?
இயலாமையில் இருந்து கொண்டு ஆணீயத்தை சாடிக் கொண்டிருக்கும் உங்களின் தந்திரங்களுக்கு காரணம் தான் என்ன? சக பெண்ணாக கேட்கின்றேன்....
உங்களின் இயலாமை ஆணீன் பலமா? உங்களின் பலவீனமா?
தமிழச்சி 07/08/2008
|
 |