Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


FEB
04
2010

பெங் ஷுலின் என்னும் அசாதரண மனிதன்!

முதலில் ´பெங்ஷீலி´னுக்கு [Peng Shulin] நடந்த விபத்தை பார்த்துவிடுங்கள்.
http://webtv.realitatea.net/actual/un-politist-vietnamez-taiat-in-doua-de-un-cam

1995- இல் வியட்நாமில் நடந்த சம்பவம் அது.

சாலை ஓரமாக சென்றுக் கொண்டிருந்த பெங் ஷுலின் மீது லாரி மோதிய போது தடுமாறி விழுந்த பெங் ஷுலின் உடலின் மேல் லாரி ஏறியதில் வயிற்றுப் பகுதி கீழே பாதி துண்டாக்கி விட்டது. ஏகப்பட்ட இரத்தம் வெளியேறிவிட்டது. பெங் ஷுலின் உயிர் பிழைக்கமாட்டார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்திருந்தனர்.

வலியில் துடித்துக் கொண்டிருந்த பெங் ஷுலின் தன் அருகே துண்டாகி கிடந்த கால்களையும், வயிற்கு கீழ் பகுதியையும் பார்க்க முடிந்தது. அவரால் கணப்பொழுதில் நடந்த சம்பவத்தை புரிந்து கொள்ள முடிந்தது. தன் அருகே தன்னுடைய பாதி சிதைந்த உடல்...

எப்படி இருந்திருந்திருக்கும் பெங் ஷுலினுக்கு?

பிழைக்க மாட்டார் என்ற அவநம்பிக்கையுடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடுமையான போராட்டத்திற்கு பின் டாக்டர்கள் பெங் ஷுலினைக் காப்பாற்றிவிட்டனர்.

தற்போது பெங் ஷீலினின் உயரம் 78 செ.மீ மட்டுமே.

வயிற்றுக்கு கீழே எந்த பகுதிகளும் இல்லை. அந்த பகுதிகளை மூடுவதற்காக  பெங் ஷுலின் தோல்களை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டியெடுத்து மூடிவிட்டார்கள். இதற்காக 20- டாக்டர்கள் கொண்ட மருத்துவ குழுவால் பெங்ஷீலினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள்.

அடுத்த கட்டமாக படுக்கையிலேயே இருந்த பெங் ஷுலினுக்கு நிற்பதற்கும், நடப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நீண்ட காலத்திற்கு பின் ஒரளவு நடக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார்.

இந்நிகழ்ச்சி மருத்துவ உலகத்தின் அதிசயம் என்கிறார்கள்.

"உடல் பலவீனம் அடையும் பொழுதெல்லாம் மனம் அதைரியமடைகிறது" என்று மனதத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்வார்கள்.

பெங் ஷுலினோ தன் உடலின் பெரும்பகுதியை இழந்தும் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மனோதத்துவத்தை நடைமுறைப்படுத்தும் வழிகளை வில்லியம் ஜேம்ஸ் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார்:

"ஒர் நிகழ்ச்சி நடந்து விட்டது. நடக்கக்கூடாத நிகழ்ச்சி ஆனால் நடந்துவிட்டது. என்ன செய்வது?

அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலையைப் பெறுங்கள். எந்த ஒரு துரதிர்ஷ்ட்டத்தின் விளைவுகளையும் சமாளிப்பதற்கு முதல்படி நிகழ்ந்துவிட்டதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான். அந்த உணர்வுதான் நம்மை அடுத்தக் கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும். அதாவது தீர்வு காணக்கூடிய கட்டத்திற்கு." [´வில்லியம் ஜேம்ஸ்´ - மனதத்துவ ஆய்வாளர்]

ஒருவேளை பெங் ஷுலின் இத்தத்துவத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டாரோ?

பெங் ஷுலினுடைய சில புகைப்படங்கள்:

http://picasaweb.google.com/tamizachi/ICtPXD#


தமிழச்சி
04.02.2010




 

 82 

 

 83 

 

 84 

 

 85 

 

 86 

 

 87 

 

 88