Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


FEB
06
2010

வாசகர் கடிதங்கள்....

Name : செல்வநாதன்
e-mail : ...............................................


தோழி உங்களுடைய எழுத்துக்கள் சில காலமாகத்தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இது உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். உங்களுடைய எழுத்துக்களின் வீரியத்தைக் கண்டு அதிசயப்படுகிறேன். வாழ்த்துக்கள்.

ஆனால் தங்களின் பெரியாரியல் கட்டுரைகள் குறித்து பேஸ் புக்கில் விவாதிக்கும் பொழுது ஆரியம், பார்ப்பனீயம், சாதி பிரச்சனைகள் குறித்து அதிகமாக விவாதிக்கிறீர்களே தோழி. அவைதான் சற்று சங்கடத்தை கொடுக்கிறது. சற்று வெளிப்படையாக பேச வேண்டும் என்றால் என்னை எரிச்சல் படுத்துகிறது தோழி. இன்னும் எத்தனை காலத்திற்கு ஆரியம், பார்ப்பனீயம், சாதியை மையப்படுத்திய விவாதத்தையே தொடருவீர்கள். ஆரியர்கள் என்பவர்கள் யாருமில்லை. இப்போது கலப்படமாகிவிட்ட இனம்தானே ஆரியம்? இதை உணரவில்லையா நீங்கள்?

ஏதோ கேட்க வேண்டும் என்று தோன்றியது கேட்டுவிட்டேன். நண்பன் உனக்கு இருக்குடா மவனே என்று மிரட்டுகிறார். எனக்கென்னமோ நீங்கள் திட்டுவதை விட விளக்கம் கொடுப்பீர்கள் என நம்புகிறேன். (திட்டினாலும் பரவாயில்லை)

(விளக்கம் கொடுப்பதாக இருந்தால் மின்னஞ்சல் முகவரியை வெளியிடுங்கள். திட்டுவதாக இருந்தால் முகவரி வெளியிட வேண்டாம் தோழி.)

அன்புடன்
செல்வநாதன்

அன்புடைய செல்வநாதன்

நான் எதற்கு திட்டப்போகிறேன். எப்படி வார்த்தைகள் நம் மீது ஏவப்படுகிறதோ அதே பாணியில் திருப்பி அடிப்பது பழகிப்போய்விட்டது. அதற்காக ரவுடி கணக்காய் என்னை நினைத்துக் கொண்டிருந்தால் நான் என்ன செய்வது?

ஆரியம் ஏது? திராவிடம் ஏது? இரண்டுமே கலப்படமாகிவிட்டது என்கிறீர்கள். இது தந்திரமிக்க சூழ்ச்சி நிறைந்த வார்த்தைகள். இதை
பெரியார் எப்படி அம்பலப்படுத்துகிறார் என்பதை அவர் வாக்கியத்திலேயே இங்கே கூறுவது சிறப்பாகும்.

"இரத்தக் கலப்பு ஏற்பட்டுவிட்டதென்பது உண்மையானால் தோழர்களே, இன்னும் ஏன் ஆரியர் எல்லோரும் பார்ப்பனர்களாக இருக்க, திராவிடர் எல்லோரும் சூத்திரர்களாக இருக்கிறார்கள்? இன்னும் ஏன் பார்ப்பான் உச்சிக்குடுமி வைத்துக் கொண்டிருக்கிறான்? இன்னும் ஏன் பார்ப்பான் பூணூல் மாட்டிக் கொண்டிருக்கிறான்? இன்னும் ஏன், பார்ப்பான் தொட்டால் சாகாத கடவுள், நாம் தொட்டால் செத்துப் போய்க் கொண்டிருக்கிறது?

ஒருத்தன் பார்ப்பானாகவும், ஒருத்தன் பஞ்சமனாகவும் இருக்க நீங்கள் காரணமா, நாங்கள் காரணமா? மக்களிடையே பிரிவினை கூடாது என்கின்ற எண்ணம் உங்களுக்கு உண்மையாகவே இருக்குமானால் நீங்களே விலக்கி விடலாமே, "இனி நாட்டிலுள்ள எல்லோருமே சமம் பார்ப்பானென்றும், பஞ்சமனென்றும் மேதமில்லை, பார்ப்பானென்றும் சூத்திரனென்றும் பேதமில்லை," என்று நீங்களே ஒழித்து விடலாமே, உங்கள் உச்சிக்குடுமியையும் பூணூலையும் நீங்களே கொடுத்து விடலாமே, கோயில் சாவிகளை எங்களிடம் தந்து, பூசை செய்யும் தட்டில் விழும் காசை எடுத்துக் கொள்ளவும் நீங்களே எங்களை அனுமதித்து விடலாமே. நீங்களே அழித்து விடலாமே, பிறவியினால் பேதமும், இழிவும் கற்பிக்கும் சாஸ்திரப் புராண இதிகாச ஆதாரங்களை நீங்களே முன்வந்து விடலாமே எங்களோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள.

இதை எல்லாம் செய்ய மறுக்கிறீர்கள். இன்னும் கோயிலில் உங்களுக்குத் தனி இடம் வேண்டுமென்கிறீர்கள். நீங்களே பூஜை செய்ய வேண்டுமென்கிறீர்கள். நீங்களே தட்டில் விழும் காசை எடுத்துச் சொருகிக் கொள்கிறீர்கள். இன்றும் சாஸ்திரங்களும் புராணங்களும் இதிகாசங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்கிறீர்கள். சூத்திரன் படிக்கக்கூடாது, படித்தால் நாட்டுக்குக் கேடு என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும் மனுநீதி சாஸ்திரமும் அப்படியே இருக்க வேண்டுமென்கிறீர்கள். இன்னும் நாங்கள் தொட்டால் உங்களுக்கு "தீட்டு" வந்துவிடுகிறது என்று சொல்லிக் கொண்டு எட்டி நின்று வருகிறீர்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உங்களுக்கே இடம் வேண்டும் என்கிறீர்கள். சகல உத்தியோகங்களும், உங்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்கிறீர்கள். எங்கள் விகிதாசாரம் கூட எங்களுக்குக் கிடைக்கக்கூடாது என்று சூழ்ச்சிகள் பல செய்து வருகிறீர்கள். இப்படி எல்லாமே நீங்களே எங்களுக்குத் தொல்லைக் கொடுத்துக் கொண்டு வந்தும், எங்களையே துவேஷிகள், பிரிவினை முயற்சிக்காரர்கள் என்று குற்றம் சாட்டி வருகிறீர்கள். இது ஒழுக்கமாகுமா? நேர்மையாகுமா? நீங்களே சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். [பெரியார், 16.11.1949]

[ இக்கட்டுரை முழுவதும் வாசிக்க இந்த இணைப்பிற்கு செல்லுங்கள்: http://ow.ly/14zuR

செல்வநாதன் நீங்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆமா நான் உங்களை திட்டினேனா? விளக்கம் கொடுத்தேனா? என்று எனக்கே குழப்பமாக இருப்பதால் உங்கள் மின்னஞ்சலை வெளியிடவில்லை.

***

Name : விஷ்ணுபுரம் சரவணன்
e-mail : vishnupuramsaravanan@gmail.com


message: தோழமைமிக்க தமிழச்சிக்கு..
வணக்கம்..

நான் சரவணன்.. பல சரவணன்கள் உலவுவதால் என் ஊரின் பெயரும் சேர்ந்து விஷ்ணுபுரம் சரவணன்.

உங்களின் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்துவருகிறேன். பெரியார் மீது எங்கு விமர்சனம் எனும் பெயரில் அவதூறுகள் முன்வைக்கப்பட்டாலும் அங்கு உங்களில் எதிர்ப்பு குரல் ஒலிப்பதை எனது குரலாகவே எண்ணி மகிழ்ந்துக்கொள்வேன். உங்களின் இலக்கியம் சார்ந்த பார்வையோடு எனக்கு மாறுபட்ட கருத்து இருப்பதை வேறொரு தருணத்தில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

வழக்கம்போல ஜெயமோகன் திராவிட இயக்கம் மீதான தன் கோபத்தை இப்போதும் தீர்த்துக்கொண்டிருக்கிறார். போகிற போக்கில் பெரியாரின் மொழி பார்வையையும் பார்ப்[பனிய பார்வையோடு ஒன்று சேர்த்திருப்பதை காணமுடிகிறது.

அதனை களையும் வேலை பெரியாரியவாதிகள் அனைவருக்கும் இருக்கிறது.

விஷ்ணுபுரம் சரவணன்


அன்புடைய சரவணன்

நீங்கள் கூறுவது உண்மைதான். தற்போது மீண்டும் திராவிடம், மொழி என ஜெயமோகன் ஆரம்பித்திருக்கிறார். இணையத்தில் பெரியாரிஸ்ட்டுகள் எழுதுவது குறைவு. அவர்கள் தமிழகத்தில் களப்பணியில் இயங்குபவர்கள். அவதூறுகளுக்கு விளக்கம் அளித்துதானே ஆகவேண்டும். பார்ப்போம்...

***

Name : gnanamani
e-mail : gnanamani01@gmail.com


message : வணக்கம் சகோதாரியே

நான் நலம். தங்கள் நலமறிய ஆவல். நான் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த்துறையில் \\\\"இணைய இலக்கிய இதழ்கள்\\\\" என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகின்றேன். உங்கள் இணையம் மிகவும் உபயோகமாகவும். கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்கும் தளமாகவும் இருக்கிறது. வாழத்துக்கள்.

உங்களுக்கு தெரிந்த தமிழ் இலக்கிய இணைய இதழ்கள் இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும்.
நன்றி.

அன்புடைய கானாமணி

தமிழ் இலக்கியமா? எனக்குக்கூட தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்ற உந்துதல் வந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு புலவர் பன்னீர் செல்லம் என்பவர் மூலம் தொலைப்பேசியில் 1 மணி நேரம் வகுப்பெடுப்பார். என்னென்ன புத்தகங்கள் தேவைப்படும் என்று பெரிய லிஸ்ட் போட்டு கொடுத்திருந்தார். தமிழ்நாட்டில் இருந்து இலக்கிய புத்தகங்களும் வந்துவிட்டது. இலக்கியம் படித்ததில் ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. அன்றிலிருந்து யாராவது தமிழ் இலக்கியம் பற்றி பேசினால் திகிலாக இருக்கிறது. எனக்குள் தாழ்வு மனப்பான்மைபோல் வந்துவிடுகிறது. நைசாக எஸ்கேப் ஆகிவிடுவேன்.

இப்போது உங்களுடைய கேள்விக்கு என்ன செய்து? எஸ்கேப் தான்.

***

Name : elavazhagan
e-mail : elavazhagan@hotmail.com


message : Your Tamizachi website & tamizachi-periyar website contents are very good

Thanks for your active participation tamil & periyar movement.
keep it up.

regards,
elavazhagan.

***

Name : sasi kumar
e-mail : cutesasi24@gmail.com


message : நான் ஒரு நாத்திகன்

எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, எங்கு சமத்துவதுக்கு இடமில்லையோ அங்கெல்லாம் நாத்திகம் முளைக்கிறது.

***

Name : baskar
e-mail : tamizhikani@yahoo.com


message : உங்கள் மறுமொழிக்கு நன்றி.

\\\\இன்னொரு புறம் எளியவர்கள் என்பவர்களை யாரை எந்த பொருளில் குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்கவில்லை\\\\

இணையம் வசதி வாய்ப்புக்கள் இல்லாத படிக்கும் ஆர்வமுடைய மற்றும் அறியாமையில் உள்ளவர்களை மனதில் கொண்டே அதை எழுதினேன்.

\\\\இருப்பினும் நன்கு படித்து வெளிநாடுகளில் வேலைக்கு சென்றிருக்கும் நம் இளைஞர்களுக்கு கூட சரியான சிந்தனை இல்லை\\\\

உண்மைதான் இணைப்புகள் கொடுத்தாலும் ஆர்வமில்லாமல் இருப்பதும் ஆனால் சினிமா தொடர்பானவை என்றால் உடனே படிப்பதும்,சமூக அவலங்களை பற்றி பேசினால் அவர்கள் திறமை இல்லாதவர்கள் என்பதும் தொடர்து ஆக்கபூர்வமாக பேசாமல் கோபம் கொள்வதும் பிரச்சனைகளை தன்னை முன்னிருத்தியே யோசிப்பதும் நேரில் கண்டவை.

\\\\சமூகத்தை மாற்ற முடியாவிட்டாலும் நாலு பேரை சிந்திக்க வைத்தால் கூட போதுமே!\\\\

நிச்சயம் நீங்கள் நாலு பேரோடு நின்று விட கூடாது. எப்படி கொண்டு செல்வது என்று நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை அதோடு உங்களின் எழுத்துகளை படிக்கும் நாங்கள் கொண்டுசெல்ல வேண்டிய கடமையும் உண்டு நிச்சயம் செய்வோம். பெண்களை ஆண்கள் இவ்வளவு மோசமாக இத்தனை ஆண்டுகள் அடக்கி வைத்திருக்கிறார்களே. வரலாற்றில் ஒரு பெண் கலகக்காரி கூடவா தோன்றவில்லை என்ற ஆதங்கம் எப்போதும் எனக்குண்டு. இல்லை மறைக்கபட்டு இருக்கிறர்களா? அதை பற்றி ஒரு பதிவு இட அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடைய பாஸ்கர்,

தமிழ்நாட்டில் கலகக்காரிகளா?

ம்ம்ம்... எனக்குத் தெரிந்து ´குயிலி´ என்ற பெண் பேராளி தான் முதன்முறையாக அநீதிக்கு எதிராக போராடியதும் அல்லாமல் மனித வெடிகுண்டாக மாறிய தற்கொலை போராளியுமாவார்.

குயிலியை பற்றி எழுத வேண்டும். இன்னும் சரியான தகவல்கள் வேண்டும். நன்றி தங்களின் கருத்துக்களுக்கு...



 

 81 

 

 82 

 

 83 

 

 84 

 

 85 

 

 86 

 

 87