Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


FEB
07
2010

வாழ்க்கை மகத்தானது!

"மனிதனிடம் இருக்கின்ற சக்தி அவனுக்குள் ஆழ்ந்து உறைந்து கிடக்கிறது. இதுவரையில் நினைத்துப் பார்த்திருக்காத சக்தியைத் தூண்டிச் செயல்படுத்தினால் நமக்குள் புரட்சிகரமான பிரமிப்பை ஏற்படுத்தும்" என்பார் ´ஆரிசன் ஸ்வீட் மார்டன்.´

அதே அணுகுமுறையில் ´ராபின் எஸ்.சர்மா´வின் [Robin S.Sharma][1] சிந்தனைகள் நகர்கின்றது.

ராபின் சர்மாவின் புத்தகங்களை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?

என்ன விளம்பர பாணியில் கேள்வி இருக்கிறதே என யோசிக்கிறீர்களா?

சரி விடுங்கள்.

ஆனால், கண்டிப்பாக நீங்கள் ராபின் சர்மாவின் நூல்களை வாசித்துப் பார்க்க வேண்டும்.[2]

"mega living" புத்தகத்தில் நம் வாழ்க்கையை பக்கம் பக்கமாக அலசி பார்க்க கற்றுக் கொடுக்கிறார்.

ராபின் எஸ்.சர்மா எழுத்துக்களை படிக்கும் போதே நமக்குள் ஒருவித நம்பிக்கை, உற்சாகம், குதூகுலம், தெணாவட்டு எல்லாம் வந்துவிடுகிறது. ´மந்திர சக்தி வார்த்தைகள்´ என்பார்களே அப்படியொரு எழுத்துத் திறன் ராபின் சர்மாவிடம்.[3]

என்னத்தான் நடக்கும் நடக்கட்டுமே......

சிறு துள்ளலுடன் வாழ்க்கையை பயணிக்க வைத்துவிடும் நடை.

"சோர்வா...?"

"மனம் சேர்வடைந்து நம் எண்ணங்களையும், தீர்மாணிக்கும் சக்திகளின் வலிமையையும் குறைத்து நம்மை குழப்பி விடுகிறதா? தாழ்வான எண்ணங்களும் பலவீனமான கருத்துக்களையும் நம்மை தாழ்த்திவிடக்கூடும். எனவே நம் சிந்தனையை ஒருமுகப்படுத்தி நம் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் சோர்வாவது சோகமாவது..

"நம்பிக்கை துரோகமா..?"

"கவலைப்படாதே, துரோகத்தின் வலிகள் நமக்குள் ஒரு பாடத்தை புகட்டுகிறது. நிகழ்ச்சிகள் வெளிச்சம் போட்டுக்காட்டவே நடைப்பெற்றிருக்கினறன என்பதை உணர்ந்து கொள்"

தத்துப்பித்தென்று இல்லாது தத்துவம் தத்துவமாக எடுத்துவிடுகிறார் ராபின் சர்மா. அத்தனையும் சுயசிந்தனை சுயமுன்னேற்ற நூல்கள். உருப்படியாய் நாம் படிக்க வேண்டும் என்றால் சிறுநாவல்களையும், கவிதைகளையும் குப்பைக்கு அனுப்பி விட்டு சுயமுன்னேற்ற நூல்களை அதிகம் வாசித்து பழகவேண்டும்.

அறிவுதான் சக்தி வாய்ந்தது. அதை தூண்டிவிட்டு பகுத்தறிவினால் சிந்திக்க ஆரம்பித்தால் போதும். திடமான மனோதிடமும் உற்சாகமும் நமக்குள் உருவாகிவிடும்.

வாழ்க்கை மகத்தானது.

அதை எப்படி வாழ்ந்துச் செல்கிறோம் என்பது மிகமுக்கியமானது.

நம் மகத்தான வாழ்க்கையின் திட்டம் என்ன? அப்படியும் ஏதாவது திட்டம் நமக்கிருக்கிறதா என்ன? அப்படி ஏதாவது இருந்தால் அத்திட்டத்தை எப்படி நெறிபடுத்தி செயல்படுத்த போகிறோம்? அதற்கான திறமையும் யோக்கியதையும் நமக்கிருக்கிறதா?

இருக்கு, இல்லை அல்லது கொஞ்சம் கொஞ்சம் என முழிக்கிறீர்களா?

சரி விடுங்கள்... :-))

வேண்டாம் கவலை. புதியதாக உருப்படியான திட்டங்களை போடுவோம். அதற்கான அபாரமான செயல் திட்டங்களை நமக்கு பகிர்ந்தளிக்கிறார் ராபின் எஸ்.சர்மா. வாசித்து செயல்படுத்துவதே நமக்கான வேலை.

அதற்கான தில் வேண்டுமே! என்ன செய்வது?

முதலில் நம் வாழ்க்கையின் மேன்பாட்டுக்கு கட்டுப்பாடு தேவை என்கிறார். நம் அடிப்படை பழக்க வழக்கங்களே செயல்களாகி விடும் போது, நம் பழக்க வழக்கங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்னும் ராபில் எந்தத் துறையிலும் வெற்றி பெற வேண்டுமானால் மனக்கூர்மையும் தொடர்ந்த செயல்பாடுகளும், கட்டுப்பாடுகளும் இல்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது என்பதுடன் மனோதிடத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளையும் சொல்கிறார்.

மனத்தளர்ச்சி நம்மிடம் அதிகம் தேங்கி இருக்கிறது என்னும் ராபில் இதை ´வியாதி´ என்றே குறிப்பிடுகிறார்.

இதை எப்படி துரத்தி அடிப்பது?

அழகாக சொல்கிறார் ராபின் சர்மா:

"மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணத்தையும் கட்டுப்படுத்துவதே நம் மனத்தளர்ச்சியை நீக்கச் செய்யும் முதல் முயற்சியாகும். முதலில் மனச்சோர்வு ஏற்பட்டதற்கு காரணம் நாமே என்பதை உணர வேண்டும். அதன் எண்ணத்தைச் சீராக்க வேண்டும். இதற்கெல்லாம் பயிற்சிக்கு போக வேண்டும் என்றெல்லாம் எதுவும் இல்லை. எல்லாம் எல்லாமும் உங்களிடமே இருக்கிறது. அதை உணர்ந்து செயல்படுத்த முயலும் எண்ணத்தில் மனோதிடம் இருக்க வேண்டும்" என்கிறார்.

மற்ற சுயமுன்னேற்ற நூல்களை விட இவை முற்றிலும் மாறுபட்டே இருக்கிறது. கூடுமானவரையில் நம்மை பயிற்சிக்கு தயார் படுத்துவதிலேயே தீவிரமாக இருக்கிறார் ராபின் சர்மா.

நாம் மகத்தான வாழ்க்கையை வாழ்வதற்கு மனத்திடம், திட்டமிடல், உடல் வலிவு, மனோபலம் போன்ற திறமையான குணங்களை உருவாக்கிக் கொள்ள செய்ய வேண்டிய முக்கியத்துவங்களை அழகாக சொல்கிறார் ராபின் சர்மா.   

அட! சூப்பர் புத்தகம். நிறைய சிந்திக்க வேண்டிய சங்கதிகள் இருக்கிறது.
வாசித்துப் பாருங்கள்

தமிழச்சி
07.02.2010


தொடர்புடைய இணைப்புகள்:

* Robin S.Sharma[1]
http://bit.ly/96Oiku
* ராபின் நூல்கள்[2]
http://bit.ly/cxGtWx
* ராபின் சர்மா வீடியோவில்...[3]
http://bit.ly/b25rxv
http://bit.ly/d1i5l3
* Robin S.Sharma facebook
http://www.facebook.com/Robin.Sharma.LT?v=app_4949752878




 

 80 

 

 81 

 

 82 

 

 83 

 

 84 

 

 85 

 

 86