 |
சரிவைத் தவிர்க்கலாம்!
நிரம்பிக் கொண்டிருக்கும் கிண்ணம் வழிகிறது. கூர்மையான கத்தி மேலும் தீட்டப்படும்போது மழுங்குகிறது. பொன்னையும், மரகதத்ததையும் பூட்டி வைத்தாலும் பத்திரம் ஏது?
பணம், பதவி, புகழுடன் வரும் ஆணவம் சரிவை நோக்கி நம்மை சாய்க்க காத்துக் கொண்டிருக்கிறது. காரியம் முடிந்தவுடன் கழற்றிகொள்; இறங்கிவிடு, இதுதான் இயற்கை காட்டும் பிரபஞ்ச உண்மை.
***
இருப்பதை வைத்துக் கொள்... இல்லாததை உபயோகி!
இருபத்துநாலு கால்கள் கொண்ட சக்கரம் செய்கிறோம். உபயோகிப்பதோ நடுவில் உள்ள வெற்றிடத்தை. களிமண்ணால் பானை செய்கிறோம் உபயோகிப்பதோ வெற்றிடத்தை,
கதவுகளும் ஜன்னல்களும் வைத்து வீடு கட்டுகிறோம். உபயோகிப்பதோ உள்ளே உள்ள வெற்றிடத்தை
எனவே,
எது இல்லையோ அதை உபயோகி எது இருக்கிறதோ அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்.
* சீன தத்துவ ஞானி லாட்சு.
|
 |