 |
நாம் வாழும் சமூகத்தின் தேவைகளினாலும், குடும்பத்தின் காரணம் கொண்டும், நம்முடைய துயர அனுபவங்களினாலும், சில கோட்பாடுகளை அல்லது முறைகளை அனுசரித்தும் பெரும்பாலானோர்களின் வெளிப்புற வாழ்க்கை ஒழுங்குபடுத்தப்பட்டு இருக்கிறது.
இத்தகைய ஒழுங்கு உணர்விழந்து, சக்தியிழந்து வாழ்க்கையே மந்தமுள்ளதாக ஆக்கிவிடும். ஒழுங்குகள் அடக்கப்பட்டதன் விளைவாகவும், பயத்தின் காரணமாகவும் இருக்கக் கூடாது. உண்மையான ஒழுங்குமுறை எப்படி வரவேண்டும் என்றால் மனச்சுதந்திரம் தொடக்கத்திலேயே இருக்க வேண்டும். கடைசியில் அல்ல.
ஒழுங்குகளைப் பின்பற்றுதலிருந்து விடுதலை அடைவதே ஒழுங்கு தான். கற்றுக் கொள்வதிலே மனத்தெளிவு உண்டாகும். அடக்குதல், இடங்கொடுத்தல், சலுகை காட்டுதல் போன்ற செயல்களின் அமைப்புகளையும், இயல்புகளையும் தெரிந்து கொள்ள மிகுந்த கவனம் தேவை.
எதையும் சரிவர புரிந்து கொள்ளுதலால் அடக்கு முறை என்றில்லாது ஒழுக்கம் தானே வரும்.
|
 |